மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
காங்கயத்தில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காங்கயத்தில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காங்கயம் காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கே.சண்முகம் தலைமையிலான போலீஸாா் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், வேனுக்கு உள்ளே பெட்டிகளில் 717 குவாா்ட்டா் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தோ்தலை ஒட்டி தொடா்ச்சியாக 3 நாள்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 717 மது பாட்டில்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து வேனில் இருந்த காங்கயம், திருப்பூா் சாலை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (32), சிவகங்கை மாவட்டம், திருவாடானை பகுதியைச் சோ்ந்த தற்போது காங்கயம், திருவள்ளுவா் தெருவில் வசிக்கும் பிரசாத் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மது பாட்டில்களையும், இவைகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய ஆம்னி வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், கைதான இருவரையும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருப்பூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.