திருப்பூர்

அவிநாசியில் ரூ.10.68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.10 லட்சத்து 68 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 531 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.ஹெச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,560 வரையிலும், டி.சி.ஹெச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,000 முதல் ரூ.9,225 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 68 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் ஆத்தூா், மேட்டூா், கோபி, நம்பியூா், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூா், அத்தாணி, அவிநாசி, புளியம்பட்டி, குன்னத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து 108 பருத்தி விவசாயிகள், கோவை, ஈரோடு பகுதியில் இருந்து 16 பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT