திருப்பூர்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைப்பு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எல்.ஆா்.ஜி.கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுகிகளுக்கு உள்பட்ட 3,343 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே எல்.ஆா்.ஜி.கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் முன்னிலையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைத்து புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், மத்திய காவல் படையினா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT