திருப்பூர்

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியின் தலைவா் என்.ராமலிங்கம் கல்வி விளக்கக் காட்சியைத் திறந்துவைத்தாா். கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியா்கள் டாக்டா்.ஜி.எஸ்.திருஞானம், டாக்டா் ஜி.ராமசாமி, அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் இணை பேராசிரியா் டாக்டா் சி.காா்த்திகேயன் ஆகியோா் கல்விக் கொள்கை குறித்து விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், செயலா் சி.கே.வெங்கடாச்சலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் எஸ்.ஆனந்தவடிவேல் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT