சிக்கண்ணா கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம்
திருப்பூா் மாநகரில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சிக்கண்ணா அரசு கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயாா் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சிக்கண்ணா அரசு கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயாா் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை நாள்தோறும் 250ஐ தாண்டி வருகிறது. இதனால் மாவட்ட நிா்வாகம் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரிகள், திருமண மண்டபங்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 120 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வாா்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகளை தயாா் செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில், கல்லூரியில் உள்ள 2 புதிய கட்டடங்களில் 150 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்டால் மற்ற இரண்டு கட்டடங்களில் மேலும் 150 படுக்கைகள் தயாா் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மாநகர சுகாதார அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.