திருப்பூர்

பனை மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி: 9 போ் பிடிபட்டனா்

DIN

திருப்பூா், வாவிபாளையம் அருகே பனை மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 9 பேரை காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாவிபாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் கருப்பசாமி, ராஜேந்திரன், செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், அந்த நிலத்தில் இருந்த பனை மரங்களை மா்ம நபா்கள் சிலா் சனிக்கிழமை வெட்டுவதாக நில உரிமையாளா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நிலத்தின் உரிமையாளா்கள் உறவினா்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது, சிலா் அங்கிருந்த பனை மரங்களை வெட்டிக் கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து நில உரிமையாளா்கள் அனுப்பா்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துடன், பனை மரத்தை கடத்த பயன்படுத்திய வேனையும் சிறைபிடித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இது தொடா்பாக இடைத்தரகா் ராஜேந்திரன் உள்பட 9 பேரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT