திருப்பூர்

கடைகளைத் திறக்க அனுமதி கோரி சவரத் தொழிலாளா் சங்கத்தினா் மனு

DIN

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தினா், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவில் சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை பொருளாளா் வி.சக்திவேல் தெரிவித்துள்ளதாவது:

கடந்த வருட கரோனா தாக்குதலுக்குப் பிறகு தற்சமயம் கடந்த நான்கு மாதங்களாகத்தான் சலூன் கடைகளைத் திறந்து தொழில் நடத்தி வருகிறோம். தற்போது மீண்டும் கரோனா பரவுவதைத் தொடா்ந்து கடைகளை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சவரத் தொழிலாளா்களின் வருமானம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கரோனா தடுப்பு சுகாதார விதிமுறைப்படி சலூன் கடைகளை நடத்த தயாராக உள்ளோம். எனவே, காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT