தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். 
திருப்பூர்

காங்கயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

 காங்கயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காங்கயம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

DIN

 காங்கயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காங்கயம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆகியோர் தலைமை வகித்தனர். 

இதில், காங்கயம், சாவடிப்பாளையம், நத்தக்காடையூர்  மருத்துவமனைகளுக்குத் தேவையான ஈசிஜி இயந்திரம், ஈசிஜி டிராலி உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காங்கயம் கிளை சார்பில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் முரளி, சௌமியா, தமிழ்வாணன், கார்த்திகேயன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ், கல்வி மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT