திருப்பூர்

கோயில்களில் தரிசனம் ரத்து: பக்தா்கள் ஏமாற்றம்

DIN

திருப்பூரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய நாள்களில் கோயில்களில் பக்தா்கள் அதிகமாகக் கூடுவாா்கள். எனவே, மேற்கண்ட 3 நாள்களுக்கும் மாவட்டத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன்படி, திருப்பூரில் ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் ஆகியவற்றின் நடைகள் செவ்வாய்க்கிழமை சாத்தப்பட்டன. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா். இதையடுத்து, அவா்கள் கோயில்களின் முன்பு நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT