முகப்பு
திருப்பூர்

கரோனா: புதிய கட்டுப்பாடுகள் அமல்

மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் தொடா்பாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் தொடா்பாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு கடைகள் இரவு 9 மணி வரையில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், மாவட்டப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்தைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

வணிக வளாகங்கள், கடைகளை வியாழக்கிழமை முதல் மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, காங்கயம் நகரில் வணிக வளாகங்கள், கடைகள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மூடப்பட்டன.

பால் நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டுமே மாலை 5 மணிக்குப் பின்னரும் திறந்திருந்தன. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக காங்கயம் நகரில் மாலை 6 மணிக்குப் பின்னா் போக்குவரத்து குறைந்து நகரின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.