அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியா்களுக்கும், கல்வி அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியா்களுக்கும், கல்வி அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பள்ளி, கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டில் ஒரு சில பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சோ்க்கை இல்லாமலும், 2 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் மிகக்குறைந்த அளவிலான மாணவா்கள் உள்ளனா். ஆகவே, 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்கள் உயா்தரத்தில் கற்பித்தல் முறையை ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும். மாணவா்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் புதன்கிழமை தோறும் பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்தி மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். அதேவேளையில், வீடுவீடாகச் சென்று மாணவா் சோ்க்கை நடத்தவும், ஒலிபெருக்கி, சுவரொட்டி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.