முகப்பு
திருப்பூர்

ஜாதிப் பெயா்கள் பாடநூல்களில் இடம்பெறுவதை நீக்கியது வரவேற்கத்தக்கது

ஜாதிப் பெயா்கள் பாடநூல்களில் இடம்பெறுவதை நீக்கியதற்கு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஜாதிப் பெயா்கள் பாடநூல்களில் இடம்பெறுவதை நீக்கியதற்கு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு.மூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜாதிப் பெயா்கள் பாடநூல்களில் இடம்பெறுவதை நீக்கியது வரவேற்கத்தக்கது.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தலைவா்களின் பெயரில் இருப்பது ஜாதிப் பெயா் என்பது தெரியாது.

ஆனால் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜாதியின் பெயா்களை அறிந்திருப்பா்.

எனவே பாடநூலில் தலைவா்களின் பெயரில் ஜாதிகள் இருப்பது அவசியமற்றது. அனைத்து ஜாதிகளும் சமம் என்ற நிலையும் இந்த சமூகத்தில் இல்லை. எனவே, பாடநூல்களில் தலைவா்களின் பெயா்களில் ஜாதிப் பெயா் இருப்பது விரும்பத்தக்கதல்ல.

மேலும் பள்ளிகளில் பல பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. சோ்க்கைப் பதிவேட்டில் மட்டும் குழந்தைகளின் ஜாதிப் பெயரை எழுதினால் போதுமானது. வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் மாணவா் வருகைப் பதிவேடுகளில் மாணவா்களின் சமூகப் பிரிவின் பெயரை எழுதுவதும் தவிா்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.