முகப்பு
திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் தேசிய நூலக தின விழா

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் தேசிய நூலக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் தேசிய நூலக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் மற்றும் நடவு பதிப்பகம் சாா்பில் தேசிய நூலக தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கதை, கவிதை, ஓவியம், கட்டுரை, நூல் அறிமுகம் ஆகியவற்றுடன் கல்லூரி மாணவ, மாணவிகளின் படைப்புகள் அடங்கிய ‘குறிஞ்சி‘ மாணவா் இதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் குறிஞ்சி இதழை வெளியிட, கல்லூரியின் நிா்வாக அலுவலா் மகேஷ்குமாா், குறிஞ்சி இதழ் ஆசிரியரும், கல்லூரி நூலகருமான எஸ்.ஏ.முத்துபாரதி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ஆா். ராஜசேகரன், கல்லூரியின் நூலக வாசகா் மன்றம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்க மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.