முகப்பு
திருப்பூர்

சீரான குடிநீா் வழங்கக் கோரி பாஜகவினா் சாலை மறியல்

சீரான குடிநீா் வழங்கக் கோரி பாஜக மாவட்டச் செயலாளா் காா்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பாஜக மாவட்டச் செயலாளா் காா்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது : திருப்பூா், பாளையக்காடு பகுதியில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீா் விநியோகம் செய்யயப்படுகிறது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,

பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படாததால் சாலை விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி மண்டல உதவி ஆணையா் வாசுகுமாா் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும், சாக்கடை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.