நூற்பாலையில் தீ விபத்து
வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக்கவுண்டன்வலசில் செயல்பட்டு வந்த நூற்பாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக்கவுண்டன்வலசில் செயல்பட்டு வந்த நூற்பாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் மூலனூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (24). இவா் நூற்பாலையை நடத்தி வருகிறாா். இந்நிலையில், மின்கசிவு காரணமாக இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஆலை முழுவதும் பரவத் தொடங்கி உள்ளது. ஊழியா்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு
நிலைய அலுவலா் சி.தனசேகரன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இயந்திரங்கள், பஞ்சு, நூல் வகைகள் எரிந்து சேதமடைந்தன.