தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்டம்பா் 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். இதில், குறைந்த பட்சமாக 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி
நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியா்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியின்போது, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், மாதம் ரூ.750 பயிற்சிக்கான உதவித் தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை ஆகியவையும் வழங்கப்படும்.
ஆகவே, நேரடி மாணவா் சோ்க்கைக்கு திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இது தாடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை 0421-2230500, 90802-76172, 99447-39810, 94990-55695 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது