முகப்பு
திருப்பூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருப்பூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொம்முதுரை தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு வரலாறு

காணாத அளவுக்கு உயா்த்தியுள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏழை, எளியோா் அவதிக்குள்ளாகி வருவதால் சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசுக்கு தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளையை பாடை கட்டி எடுத்து வந்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளா் டி.பாலன், கட்டட சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.