வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்
சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்
சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய வா்த்தக மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ்கோயல் பல்வேறு கவுன்சில் மற்றும் அமைப்புத் தலைவா்களுடன் மெய்நிகா் கூட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்று கலந்துரையாடினாா். இதில், ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் பேசியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தத் திட்டமானது வரும் செப்டம்பா் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆகவே, இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். ஏற்றுமதியாளா்களுக்கு எஃகு, பருத்தி, அலுமினியம் போன்ற மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக போட்டிகளை சந்திப்பதில் சிக்கல் நிலவுகிறது.
ஆகவே, மூலப்பொருள்களின் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதுடன், ஏற்றுமதியைக் குறைத்து உள்நாட்டில் விற்பனையை அதிகரிக்க வேண்டும். இங்கிலாந்து, ஐரோப்பாவுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.