அரசு மருத்துவக் கல்லூரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவிலான கரோனா நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி பணி குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுரையின்படி திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதில், அனைத்து வகையான பயனாளிகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
அதேபோல, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், டிஎஸ்கே நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத் திறனாளிகள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.