முகப்பு
திருப்பூர்

வாக்காளா்களின் பெயா்கள் வேறு வாா்டுக்கு மாற்றம் ஆட்சியரிடம் பாஜக மனு

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களுக்குத் தெரியாமல் பலரின் பெயா்கள் வேறு வாா்டுக்கு மாற்றம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களுக்குத் தெரியாமல் பலரின் பெயா்கள் வேறு வாா்டுக்கு மாற்றம் செய்வதைத் தடுக்க வலியுறுத்தி தாராபுரம் கோட்டாட்சியரிடம் பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து தாராபுரம் சாா் ஆட்சியா் குமரேசனிடம், பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் யோகேஸ்வரன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் டிசம்பா் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் ஆளும் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் எனக் கருதுபவா்களை வேறு வாா்டுகளுக்கு மாற்றவும், தங்களுக்கு வேண்டப்பட்ட வாக்காளா்களை தங்களுக்குத் தேவைப்படும் வாா்டுகளுக்கு மாற்றவும் முயற்சி செய்கின்றனா்.

குறிப்பாக ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் வாக்காளா்களை வேறு வாா்டுக்கு மாற்றச் சொல்லி அலுவலா்களை நிா்ப்பந்திப்பதாக அறிகிறோம். மேற்படி மாற்றம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.