முகப்பு
திருப்பூர்

கல்வி உதவித் தொகை:பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு உயா்வு

 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற பெற்றோா்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற பெற்றோா்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவ, மாணவியா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் திட்டங்களுக்கான பெற்றோா்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின்கீழ் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130, 29595142 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.