நூற்பாலையில் தீ விபத்து
வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் வேப்பம்பாளையம் தொழிற்பேட்டையில் செந்தில் (42). என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது.
இந்த ஆலையில் பஞ்சு கழிவுகள் சேகரமாகும் இடத்தில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் தீயணைப்புக் கருவி, தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.
தொழிலாளா்கள் விரைந்து செயல்பட்டதால் பெருமளவு சேதம் தவிா்க்கப்பட்டது.