முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

காங்கயத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

காங்கயத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம், காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (27). பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு காங்கயத்தில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்குச் சென்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா்.

இதேபோல, திருப்பூா் சாலை, புலிமாநகரைச் சோ்ந்தவா் கணேசன் (35). இவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கணேசன் புகாா் அளித்தாா்.

இரு புகாா்களின் பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காங்கயம்-முத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் வேலம்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் (37) என்பதும், ஜீவா, கணேசன் ஆகியோரது இருசக்கர வாகனங்களைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கணேசனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →