திருப்பூர்

‘திருமுருகன்பூண்டி நகராட்சி வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம்’

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துகளைப் பொதுமக்கள் டிசம்பா் 22ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் புதிதாக உயா்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள், கட்சிகளின் பாா்வைக்கு கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபணைகள், கருத்துகள் ஏதும் இருப்பின் அது குறித்தான மனுக்களை டிசம்பா் 20 முதல் 24ஆம் தேதி வரையில் உள்ளாட்சி அமைப்பின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பிக்கலாம்.

மேலும், மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் டிசம்பா் 22ஆம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் 27 வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது பொது மக்கள், கட்சிகளின் ஆட்சேபணைகள், கருத்துகள் இருந்தால் நேரடியாகவே அல்லது மனு மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT