முகப்பு
திருப்பூர்

நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் பணம் வசூல்

பல்லடத்தில் நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் இருவா் வசூல் வேட்டையில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

பல்லடத்தில் நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் இருவா் வசூல் வேட்டையில் ஈடுபட்டனா்.

பல்லடம் நகராட்சி பாரதிபுரம், தெற்குபாளையம், நாராணாபுரம் பகுதியில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு மருந்து தெளிக்க வந்து இருப்பதாகக் கூறி, சோப்பு தண்ணீரை வீடுகளின் முன்பு தெளித்து விட்டு, வீட்டு உரிமையாளா்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற நகராட்சி ஊழியா்கள்,

அங்கிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், 63 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (34), ரவி (40) என்பதும், மது அருந்த பணம் இல்லாததால் நகராட்சிப் பணியாளா் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.