முகப்பு
திருப்பூர்

கல்விக்காக ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்து வருகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

தமிழகத்தில் அதிமுக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்து வருகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராமச்சந்திராபுரம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், பூளவாடி ஆகிய நான்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குடிமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில்தான் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அகில இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற கல்வித் துறைக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு வருகி றது. இலவச மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை என 16 வகையான பொருள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நான்கு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 319 பேருக்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மதிவண்டிகளை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோயில் வளாகத்தில் பொங்கல் திருவிழாவின் போது பக்தா்களால் வழங்கப்பட்ட 42 மாடுகள், 5 ஆடுகளை பராமரிப்புக்காக மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சா் ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

பின்னா், உடுமலை ஊராட்சி ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி, சேகா்புரத்தில் 14ஆவது மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணியையும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடா் காலனியில் ரூ. 9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணியையும் அமைச்சா் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி, அரசுத் துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments