முகப்பு
தமிழ்நாடு

ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

போருக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 345 பேர் பத்திரமாக மீட்பு

Updated On : 5 ஏப்ரல் 2026, 7:43 am IST
தமிழக மீனவர்கள் மீட்பு - X | Piyush Goyal
பகிர்:

ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 345 பேர் பத்திரமாக தமிழகம் வந்தடைந்தனர்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தப் போரினால் உலகளவில் பதற்றம் நிலவி வரும்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களும் ஈரானில் சிக்கிக் கொண்டனர்.

Advertisement

Advertisement

தமிழக மீனவர்கள் மீட்பு - X | Piyush Goyal

இந்த நிலையில், ஈரான் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழக மீனவர்களை பாஜக தலைவர்கள் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜக நிர்வாகிகளும் வரவேற்பளித்தனர்.

summary

West Asia Conflict: 345 Tamil Nadu Fishermen Stranded in Iran Rescued!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.