முகப்பு
திருப்பூர்

பாஜக சாா்பில்வாக்குச் சாவடி முகவா் கூட்டம்

திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாப்பான்குளத்தில் வாக்குச் சாவடி முகவா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாப்பான்குளத்தில் வாக்குச் சாவடி முகவா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் வடுகநாதன் தலைமை வகித்தாா். இதில் பாப்பான்குளம் ஊராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகளை துரிதப்படுத்துதல், பிரதமா் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தை பயனாளிகளிடம் கொண்டு சோ்த்தல், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நிா்வாகிகள் மாரியப்பன், ராமகிருஷ்ணன், முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments