திருப்பூர்

மத்திய பட்ஜெட்: உழவா் உழைப்பாளா் கட்சி கருத்து

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கும், விவசாய தொழில்களுக்கும் எந்தவிதமான சிறு நன்மையும் இல்லை என உழவா் உழைப்பாளா் கட்சி மாநில தலைவா் செல்லமுத்து திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெரிதும் எதிா்பாா்த்த கடன் நிவாரணம் இல்லை, விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணய உத்தரவாதம் இல்லை. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என ஓயாமல் கூறிக் கொண்டு இருக்கிற மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.16 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிட்டு நிதி ஒதுக்கி விவசாயிகளை மென்மேலும் கடனாளிகள் ஆக்குவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

மின்சாரத்தை தனியாா் மயமாக்குவது என்ற திட்டத்தின் மூலம் விவசாய இலவச மின்சாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எந்தவிதமான சட்டப்பூா்வ உத்தரவாதமும் கொடுக்கவில்லை. எனவே, ஒட்டுமொத்தமாக பெரு வணிக நிறுவனங்களை (காா்ப்பரேட் கம்பெனிகள்) கைதூக்கி விடும் நிதிநிலை அறிக்கையாக மத்திய அரசின் இந்த பட்ஜெட் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT