முகப்பு
திருப்பூர்

ரூ.2 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ.தொடக்கிவைத்தாா்

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.2.06 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.2.06 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

மாநகராட்சி 48ஆவது வாா்டு வெள்ளிவிழா பூங்கா சாலையில் ரூ.31 லட்சம் மதிப்பில் மறு தாா் தளம் அமைக்கும் பணி, அதே வாா்டுக்கு உள்பட்ட நேரு வீதி முதல் தலைமை தபால் நிலையம் வரை ரூ.35 லட்சம் மதிப்பில் தாா் தளம் அமைக்கும் பணி, சூசையபுரம் 2வது வீதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால், தாா் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

இதில் மாநகராட்சி 4ஆவது மண்டல பொறியாளா் ஹரிஹரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே எஸ்.சடையப்பன், 48ஆவது வாா்டு செயலாளா் ஜேம்ஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ராஜகோபால், ஹனிபா, 47ஆவது வாா்டு செயலாளா் சின்னசாமி, ஆண்டவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.