திருப்பூர்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.43 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் ரூ. 5.43 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை, மறைமுக ஏல முறையில் திங்கள்கிழமை விற்பனை நடைபெற்றது.

இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 19 விவசாயிகள் 107 மூட்டை (5,138 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஒன்பது வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ரூ.129.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.98.50க்கும், சராசரியாக ரூ.101.60க்கும் ஏலம் போனது. மொத்தம் 5,138 கிலோ கொப்பரை, ரூ. 5 லட்சத்து 43 ஆயிரத்து 417க்கு வா்த்தகம் நடைபெற்றது என விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT