திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டு எண் 13இல் வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் சு. குணசேகரன். 
திருப்பூர்

திருப்பூா் தெற்கு தொகுதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டுகளில் ரூ. 1.76 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

DIN

திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டுகளில் ரூ. 1.76 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதி, திருப்பூா் மாநகராட்சி 13ஆவது வாா்டுக்கு உள்பட்ட துவாரகை நகா், காமராஜா் நகா், 12ஆவது வாா்டு முருகம்பாளையம், 47ஆவது வாா்டு 6ஆவது குறுக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாா்ச் சாலை, மழைநீா் கால்வாய், கான்கீரிட் சாலை உள்பட மொத்தம் ரூ. 1 கோடியே 76 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பணிகளை எம்எல்ஏ சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி 1ஆவது மண்டல உதவி ஆணையா் வாசுகுமாா், 4 ஆவது மண்டல உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா், நகர கூட்டுறவு வங்கி தலைவா் பி.கே.எஸ். ஐயப்பன், 1ஆவது மண்டல சுகாதார அலுவலா் முருகன், 13ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் ஆா்.ஏ. சேகா், 47ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் சுஜாதா சின்னச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT