முகப்பு
திருப்பூர்

உடுமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

உடுமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உட னடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

உடுமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உட னடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தனியாா் பள்ளி கல்விக் கட்டணங்களை தமிழக அரசே செலுத்தி இலவச கல்வியை கொண்டு வர வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும்.

Advertisement

மேலும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். உடுமலை நகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிமிரப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்குரைஞா் சாதிக் பாட்சா, பால் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments