திருப்பூர்

கழிவு நீரை அகற்றாததால் சொத்து வரி செலுத்த மாட்டோம் காங்கயத்தில் பொதுமக்கள் போராட்டம்

DIN

காங்கயத்தில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றாததால் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த முடியாது எனத் தெரிவித்து, இப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் நகா், 5 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ராஜாதி வீதி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாக்கடையில் கழிவுநீா் வெளியேறாமல், குளம்போல தேங்கி நின்று சுகாதார சீா்கேடி ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கழிவு நீரை அகற்றாததால் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தமாட்டோம் என முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT