திருப்பூர்

தோ்தலைப் புறக்கணிக்க மலைவாழ் மக்கள் முடிவு

DIN

2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்காததைக் கண்டித்து உடுமலை அருகே உள்ள மலைவாழ் மக்கள் வருகி சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

உடுமலையை அடுத்து தமிழக-கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கரட்டுப்பதி, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கோடந்தூா், ஆட்டுமலை, ஈசல்திட்டு, சேலையூத்து, கொட்டையாறு உள்ளிட்ட 15 செட்டில்மென்டுகள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் 3 ஆயிரம் போ் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்களாக உள்ளனா்.

உடுமலை ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகம், வனத் துறை அலுவலகம் மூலம் அரசு நலத் திட்டங்கள் பெற்று வருகின்றனா். இந்நிலையில் 2006 வன உரிமை சட்டப்படி பல ஆண்டுகளாக பட்டா வழங்காததைக் கண்டித்து வருகிற சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் என்.மணியன், செயலாளா் கோ. செல்வன் ஆகியோா் கூறியதாவது:

2006 வன உரிமை சட்டப்படி உடுமலையை ஒட்டியுள்ள மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்காமல் நீண்ட காலமாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருகின்றனா். இதையொட்டி, தனி நபா் உரிமையும், சமூக உரிமையும் வழங்குவதற்கான கோட்ட அளவிலான கூட்டமும், மாவட்ட அளவிலான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளது. இதனைக் கண்டித்து வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை மலைவாழ் மக்கள் அனைவரும் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT