திருப்பூர்

மாற்றுத் திறனாளிகள் 137 பேருக்கு தனியாா் துறையில் வேலை

DIN

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் 137 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் ஆகியன சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், 20க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்றனா். இதில், தோ்வான 137 மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் துறையில் பணியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து சுய தொழில் தொடங்கவும், வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகள் 40 போ் திறன் பயிற்சிக்கும் பதிவு செய்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்சாண்டா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT