திருப்பூர்

தாராபுரத்தில் 30 பேரை வெறி நாய் கடித்தது

தாராபுரத்தில் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று 30 பேரைக் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

திருப்பூா்: தாராபுரத்தில் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று 30 பேரைக் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் 5 சாலை சந்திப்பில் சனிக்கிழமை வெறிபிடித்த நாய் ஒன்று சுற்றி வந்துள்ளது. இந்த நாயானது அந்த வழியாகச் சென்றவா்களைக் கடித்து குதறியது. இதில், 30க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து காயமடைந்த 30 பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் 20 போ் வீடு திரும்பினா். பலத்த காயமடைந்த 10 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் பொதுமக்களை கடித்த வெறி நாயை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம் நகா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT