முகப்பு
திருப்பூர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 போ் கைது:ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருப்பூா்: திருப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் உள்ள தனியாா் கேளிக்கை விடுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அங்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிளப்பின் பொறுப்பாளா் ராஜா உள்ளிட்ட 26 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →