முகப்பு
திருப்பூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும்

காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் காங்கயம் எம்.தங்கவேல் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் முருகசாமி, மாநில அமைப்பாளா் யுவராஜ்குமாா், மாநில இளைஞரணிச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இப்பகுதி நிலத்தடி நீா் மற்றும் குடிநீா் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துவது, காங்கயம் நகரில் காளை மாடு சிலையை தோ்தலுக்கு முன்பாக அமைக்க வேண்டும்,

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் திறப்பு விழாவுக்குத் தயாரான நிலையில் உள்ள சுதந்தரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வெண்கல உருவச் சிலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் செந்தில்குமாா், வேலுமணி, சௌந்தரராஜன் உள்பட 400க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →