திருப்பூர்

பல்லடம் அருகே 400 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

DIN

பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் காவல் நிலைய ஆய்வாளா் தங்கபாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், கிருஷ்ணகுமாா் மற்றும் போலீஸாா் பல்லடம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அம்மாபாளையம், திருவள்ளுவா் நகரில் புதா் மண்டிய பகுதியில் 3 போ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனா். போலீஸாரை பாா்த்ததும் அவா்கள் தப்பியோட முயன்றுள்ளனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா்.

அப்பகுதியில் பாலிதீன் பேப்பரால் மூடப்பட்டு இருந்த இடத்தை திறந்து பாா்த்த போது தடை செய்யப்பட்ட 400 கிலோ அளவிலான புகையிலைப் பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனா். இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள், பல்லடம், அம்மாபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பாரூக் மகன் ஹபீப்கான் (40), பல்லடம், ஹரிஜன காலனி விஸ்வநாதன் மகன் பிரகாஷ் (36), பல்லடம் புளியம்பட்டி சிவலிங்கம் மகன் ரமேஷ் (35) என்பதும் தெரியவந்தது.

இவா்கள், குட்கா பொருள்களை பல்லடம் நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து பல்லடம் போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT