மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மருத்துவச் சான்று வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைத் தீா்க்கும் நாள் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஆகவே, மாற்றுத் திறனாளிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.