முகப்பு
திருப்பூர்

திருப்பூர் அருகே பாறைக்குழியில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்பு

திருப்பூர் அருகே பாறைக்குழியில் உயிரிழந்த 8 வயது சிறுவனின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மீட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
திருப்பூரை அடுத்த பள்ளிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் சிறுவனைத் தேடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்.
பகிர்:

திருப்பூர் அருகே பாறைக்குழியில் உயிரிழந்த 8 வயது சிறுவனின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மீட்டனர்.
 திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த பள்ளிப்பாளையத்தில் 80 அடி ஆழம் கொண்ட தனியாருக்குச் செந்தமான பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழிக்கு அருகில் வசித்து வருபவர் காமராஜ், இவரது மனைவி லட்சுமி, இந்தத்தம்பதிக்கு சங்கவி (11) என்கிற மகளும், சாந்தனு (8) என்கிற மகனும் இருந்தனர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுமியும், அவரது சகோதரனும் வீட்டில் இருந்துள்ளனர். 

இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள பாறைக்குழி பகுதிக்கு இருவரும் வியாழக்கிழமை விளையாடச் சென்றுள்ளார். இதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாறைக்குழியில் தேடியுள்ளனர். அப்போது சிறுமியின் சடலம் மீதந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் பி.சுரேஷ்குமார் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

இதன் பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டதுடன், சிறுவனின் சடலத்தையும் தேடினர். ஆனால், வியாழக்கிழமை இரவு 7 மணி வரை தேடியும் சிறுவனின் சடலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் பணியை நிறுத்திவிட்டுச் சென்றனர். இந்த நிலையில், பாறைக்குழியில் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சிறுவனின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். 

ஆனால் பாறைக்குழியில் 80 அடிக்குத் தண்ணீரும், பாறைகளும், சேறும் இருந்ததால் சிறுவனின் சடலத்தை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, 2 கம்ப்ரசரை பாறைக்குழியில் செலுத்தி நீருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதன் பிறகு ஒரு வழியாக சுமார் ஒன்பதைரை மணி நேரத்துக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் சிறுவனின் சடலத்தை மீட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →