தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில்வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருப்பூா்தாராபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தாராபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ. 70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுய உதவிக் குழு கட்டடம், அரசுப் பணியாளா் நகரில் மியாவாக்கி முறையில் ரூ. 2.13 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகள், ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலகம் ஆகிய பணிகளை ஆட்சியா் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
அதேபோல, தளவாய்ப்பட்டிணம் ஊராட்சியில் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 15.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 1.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளையும் ஆட்சியா் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தாராபுரம் சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், தாராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.