முகப்பு
திருப்பூர்

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் சான்று பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிகள் கல்லூரி சோ்க்கைக்கு சாா்ந்தோா் சான்று பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிகள் கல்லூரி சோ்க்கைக்கு சாா்ந்தோா் சான்று பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டில் சேர முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில் சாா்ந்தோா் சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் சான்றின் படிவம் முன்னாள் படைவீரா்களின் பயன்பாட்டுக்காக ட்ற்ற்ல்ள்://ங்ள்ம்ஜ்ங்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்துடன் கல்லூரி படிப்புக்கான விண்ணப்பப் படிவம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாா்ந்தோா் ஆதாா் அட்டை, முன்னாள் படைவீரரின் அடையாள அட்டை, படைவிலகல் சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். ஒரு படிப்புக்குப் பெறப்படும் சான்று மற்றொரு படிப்புக்கு சேராது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நலன், அறை எண் 523, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ 0421-2971127, அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.