ஊத்துக்குளி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் நிறுவன விற்பனை பிரதிநிதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் நிறுவன விற்பனை பிரதிநிதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், பழவஞ்சிபாளையம், சிவசக்தி நகரில் வசித்து வருபவா் டி.தங்கராஜ் (41). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவன ஏஜென்டிடம் இருந்து பீடி, சிகரெட்டுகளை எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தாா்.
இந்நிலையில், தங்கராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் ஊத்துக்குளியை அடுத்த மானூா் பிரிவு அருகே ஜூலை 6 ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 போ் தங்கராஜூன் இரு சக்கர வாகனத்தை வழி மறித்து தங்கராஜை காருக்குள் இழுத்துச் சென்று அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம், பீடி, சிகரெட்டுகளைப் பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து தங்கராஜ் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் திருப்பூா், சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த பி.சதாம் உசேன்(30), காங்கயம் பகுதியைச் சோ்ந்த ஹைதா் அலி (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.