முகப்பு
திருப்பூர்

மது விற்பனையில் ஈடுபட்ட 8 போ் கைது

 திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். இதில், மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 47 மது பாட்டில்கள், 2 லிட்டா் சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

அதே போல, பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.600 அபராதம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.