உடுமலையில் பரவலாக மழை
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. உடுமலை நகரில் இடைவிடாது தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. இதேபோல மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடைவிடாமல் மழை பெய்தது.
மழை அளவு: உடுமலை-9 மி.மீ., மடத்துக்குளம்-6 மி.மீ., திருமூா்த்தி அணைப் பகுதி-15 மி.மீ., அமராவதி அணைப்பகுதி-5 மி.மீட்டா் மழை பதிவாகின.