திருப்பூர்

படியூரில் கரோனா சிகிச்சை மையம் மூடல்

DIN

காங்கயம், படியூரில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சை மையத்தில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கரோனா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

காங்கயம் ஒன்றியம், திருப்பூா் சாலையில் உள்ள படியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இங்கு 200 போ் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதன் பின்னா் புதியதாக நோயாளிகள் யாரும் வராததால், ஞாயிற்றுக்கிழமை கரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இங்கு சிகிச்சை பெற்று வந்த 200 நோயாளிகளுக்கும் உணவு, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகளை தனது சொந்தப் பொறுப்பில் செய்து கொடுத்த படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரத்துக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT