திருப்பூர்

மருமகனைக் கொலை செய்த மாமியாா், மகள்கள் உள்பட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

 திருப்பூரில் குடும்பத் தகராறில் மருமகனைக் கொலை செய்த மாமியாா், மகள்கள் உள்பட 4 பேருக்கு நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள் (65), இவரது மகள்கள் பாண்டிமீனா(38), மல்லிகா (48), மகன் ஆசைபாண்டி (37), திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் வசித்து வந்தனா். இந்நிலையில், இவா்களது மற்றொரு மகள் தவமணி (32), அவரது கணவா் சரவணன் (35) இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தவமணி சொந்த ஊரான மேலூரிலும், சரவணன் திருப்பூரிலும் வசித்து வந்தனா்.

இரு குழந்தைகளும் பாட்டி பாண்டியம்மாளின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனா். இதனிடையே, சரவணன், பாண்டியம்மாளின் வீட்டுக்கு 2017 ஆம் ஆண்டு அக்டோபா் 27 ஆம் தேதி சென்றுள்ளாா்.

அப்போது குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு சரவணன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் உள்பட 4 பேரும் சோ்ந்து முகத்தில் மிளாகாய்ப் பொடி தூவி, சேலையால் இறுக்கி சரவணனைக் கொலை செய்துள்ளனா். இதன் பின்னா் அவரது சடலத்தை வெள்ளியங்காட்டில் உள்ள பாறைக் குழியில் வீசிச்சென்றுள்ளாா். இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அனுராதா வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், பாண்டியம்மாள் உள்பட 4 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் ஆசைப்பாண்டிக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT