கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூரில் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சூா்யா நகரில் உள்ள பழைய குடோனில் நிகழ்ந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த கே.ஜெயராம் (20) என்பவா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஜெயராமை ஒரு ஆண்டுக்கு குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயராமிடம் காவல் துறையினா் வழங்கினா். திருப்பூா் மாநகரில் இந்த ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 35 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.